திருவனந்தபுரம்;
கேரள முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்த பின் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இடதுசாரி தலைவர்கள் என்றும் எனது ஹீரோக்கள். எனது குடும்பத்தில் பலரும் இடதுசாரி ஆதரவாளர்கள். எனது நிறம் காவியல்ல. இடதுசாரிகளுடன் இணைந்து பணியாற்றுவது நாட்டு மக்களுக்கு நல்லது.

40 ஆண்டு சினிமா வாழ்க்கையிலிருந்து இன்று அரசியல் வாழ்க்கைக்கு திரும்புகையில் அதன் நிறம் நிச்சயமாக காவியல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

முன்னதாக முதல்வர் பினராயி விஜயனை அவரது இல்லமான கிளிப் ஹவுசி்ல் கமல்ஹாசன் சந்தித்தார். முதல்வரின் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். சந்திப்பின் போது அரசியல் பேசியது மட்டுமல்லாது தனது அரசியல் பயணத்துக்கு ஒரு கல்வியாகவும் அமைந்தது என அவர் கூறினார்.இந்த சந்திப்பு குறித்து கமல் தனது முகநூல் பதிவில், எனக்கு ஏற்கெனவே கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நல்ல உறவு உள்ளது. திருவனந்தபுரம் வரும்போதெல்லாம் நான் அவரை சந்திப்பதுண்டு.

அவர் முதல்வரான பிறகு இப்போது தான் முதல் முறையாக சந்தித்தோம். பொதுவாக தென் இந்தியா பற்றியும் குறிப்பாக தமிழக அரசியல் பற்றியும் நாங்கள் பேசினோம் என கமல் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: