சண்டிகர்,

சோனிபத் ஐடிஐ கல்லூரியில் வகுப்பறையில் வைத்து மாணவர் ஒருவர் தனது சக மாணவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஐடிஐ கல்லூரியில் வகுப்பறையில் வைத்து மாணவர் ஒருவர் தனது சக மாணவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவலர்கள் கூறுகையில், வகுப்பறைக்குள் நுழையும் இரு மாணவர்களில் ஒருவர் , தனது பையில்  மறைத்து வைத்து எடுத்துவரப்பட்ட நாட்டு துப்பாக்கியால், வகுப்பறைக்குள் அமர்ந்திருக்கும் சக மாணவரை சுட்டு விட்டு இருவரும் தப்பி சென்றனர். இந்த சம்பவங்கள் அனைத்து வகுப்பறையில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய மாணவர்களை தேடி வருகிறோம் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: