அனிதா தற்கொலை
——————————-
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை போராடிய அரியலுார் மாணவி அனிிதா இன்று தற்கொலை செய்துள்ளார்.
1176 மார்க் வாங்கி–கட் ஆப் 196.5 மார்க் இருந்தும் மத்திய பாஜக அரசும் தமிழகஅரசும்
இணைந்து கிராமப்புற தலித் மாணவியை தற்கொலைக்குத் துாண்டி விட்டனர். தாயை இழந்து ஒரு லோடுமேன் தந்தையின் ஆதரவில் மருத்தவராகும் கனவோடு இருந்தார்.
கடைசிவரை போராடிப்பார்த்து இரக்கமற்ற அரசுகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார்.இதற்கு
அவகாசமின்றி நீட்தேர்வை அடாவடியாக மோடி அரசு திணித்தது அடிப்படையான காரணம்-அதற்கு
அடிபணிந்துகிடந்த அதிமுக அரசுமே கொலைகாரர்கள்.
மாநில உரிமை பறிப்புபற்றி தமிழக அரசு
வாய்திறக்காத நிலையே கடைசிக்காரணம்–ஒரு
வருடம் வாய்தா தருவதாய் கூறி ஏமாற்றியவர் மோடி…
ரோகித் வெமுலா வுக்குப்பின் அனிதா மரணம்
என்னை அளவிலா துயரத்தில் ஆழ்த்துகிறது.
உனக்கு அஞ்சலி மகளே..
–Sap Marx
Leave a Reply
You must be logged in to post a comment.