பாருங்கடா இந்த முகத்த… மனசெல்லாம் பதறுதேடா…

வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய கட்டையில ஏத்திட்டீங்களே.?

இன்னும் கூட உணராம
ஏழு லட்சமும்…ஒரு அரசு வேலையும்னு சொல்லி ஏழைங்க வாயை மூடுறீங்களே..

இவ்வளவு நாளா ஓட்டுக்கு விலை வைச்சி ஆண்டீங்க…
இப்போ உசுருக்கும் லட்சியத்துக்கும் கூட
விலைபேசி அடிக்கிறீங்க…

மூட்டைத் தூக்கி வளத்த புள்ள..
இப்போ மூச்சில்லாம கெடக்குறாளே…
தாயில்லா புள்ள…
தன்னையே கொடுத்துட்டாளே..

உங்க வீட்டு பிள்ளையானால்..
இப்படியெல்லாம் பேசுவீங்களா..?
நிவாரணம் வாங்கி ஒதுங்குவீங்களா?

பாருங்கடா இந்த முகத்தை
வயிறெல்லாம் எரியுதேடா…
உங்களுக்கெல்லாம்…..
பதவி ஒரு கேடா?

M Punniyamoorthy

Leave A Reply