மும்பை,

மும்பையில் 5 மாடி கட்டடம் இடி விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வியாழனன்று மும்பையின் பிந்தி பஜார் பகுதியில் உள்ள 117 ஆண்டுகள் பழமை வாய்ந்த 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டத்தில் வசித்து வந்த வந்த குடியிருப்பு வாசிகள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வியாழனன்று 27 உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரில் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த ஓர் அதிகாரியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

Leave A Reply