பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பெரும் மோசடி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி கடுமையாகச் சாடி இருக்கிறார். அதன் மோசமான விளைவுகளிலிருந்து அவர் 14 முக்கிய குற்றச்சாட்டுகளை, கேள்விகளை எழுப்பி இருக்கிறார். பதில் சொல்ல முடியாதவர்கள் நாண்டு கொண்டு நின்று சாகலாம்.

1. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை யார் தீர்மானித்தது? ரகுராமன் ராஜன் பதவி விலக வைத்ததற்கு அதுதான் காரணமா?

2.கஷ்டப்பட்டு சம்பாதித்த தங்கள் பணத்தை எடுப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் காத்து நின்று இறந்து போனார்கள். அதற்கு யார் காரணம்? அவர்களுக்கு என்ன இழப்பீடு வழங்கப்பட்டது? இது தொடர்பாக காவல் நிலையத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?

3. பூடான், நேபாள கூட்டுறவு வங்கிகளில் இருந்து கரன்ஸி நோட்டுகள் எடுக்கப்பட்ட பிறகு, மதிப்பிழப்பு செய்யப்பட்ட தொகையைத் தாண்டியும் பணம் வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண மோசடி வெற்றிகரமாக நடந்திருப்பதை இது காட்டவில்லையா?

4. மே.வங்காளத்தில் இன்னும் பிற பிரதேசங்களில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு கொஞ்சம் முன்பாக பிஜேபி கட்சியின் முக்கியஸ்தர்கள் பெரும் தொகையில் டெபாசிட் செய்துள்ளனர். சுதந்திர இந்தியாவின் மிகப் பெரும் ஊழல் இது. பிரதமரின் கருப்புப்பணத்திற்கு எதிரான போர் இதுதானா?

5. 2016 நவம்பர் 8ம் தேதி டிஜிட்டல் இந்தியா குறித்து பேசப்படவில்லை. ஆனால் பொருளாதாரம் ஸ்தம்பித்தவுடன், தங்களுக்கு தோதான சில தனியார் நிறுவனங்களிடம் அரசு உதவிக்கு போய் நின்றது. பே டி.எம் போன்ற நிறுவனங்களுக்கு பிரதம மந்திரியே விளம்பர மாடலானார். இதெல்லாம் தேசீய, சர்வதேசீய விளையாட்டு வீரர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கத்தானே?

6. பதினொரு லட்சம் கோடிக்கும் மேலே பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாத கார்ப்பரேட் முதலாளிகளுக்கு உதவுவதற்குத் தானே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த மோசமான விளைவுகளிலிருந்து வங்கிகளை காப்பாற்றவா இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? மக்களின் பணத்தில் இருந்து பெறப்பட்ட இந்த பெரும் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளைத்தானே அரசு எடுத்திருக்க வேண்டும்?

7. ஊழலை ஒழிக்க தொலைதூரம் செல்ல வேண்டிய நிலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ருபாயானது 1000 ருபாயை விட அதிக மதிப்பு கொண்டதாயிருக்கிறது. ஊழல் செய்யும் பெரும்பணக்கார்களுக்கு உதவும் இதைத்தானா பிரதமர் விரும்பினார்?

8. கள்ளப்பணத்தை ஒழிப்பேன் என பிரதமர் சொன்னது தவறு. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ளப்பணமெல்லாம் நல்ல பணமாகிவிட்டது.

9. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவீரவாத அமைப்புகளின் செயல்கள் தடுத்து நிறுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இறந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி இருக்கிறது.

10. முறை சாரா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தேசத்தின் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்களை வைத்திருக்கும் இந்த தொழில்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நொறுங்கி விட்டன. வேலை வாய்ப்பும், வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அரசுதான் இதற்கு காரணம்.

11. இந்த மோசமான நடவடிக்கையால் கிராமப்புற பொருளாதாரம் சீர்லகுலைந்து போயிருக்கிறது. விவசாயிகள் பெரும் அவலங்களை சந்திக்கின்றனர். அவர்களது போராட்டங்களை பிஜேபி அரசின் காவல்துறை துப்பாக்கிச்சூடுகள் நடத்தி நசுக்குகின்றன.

12. புதிய ருபாய் நோட்டுகள் அச்சடிக்க 8000 கோடியும், ஏ.டி.எம் மிஷன்களை அதற்கேற்ப தகவமைக்க 35000 கோடியும், தேசத்தின் பொருளாதார இழப்பாக 1,50,000 கோடியும் என மிகப்பெரும் சுமையை மக்கள் தலையில் கட்டியது ஏன்?

13. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமரை மகிமைப்படுத்த செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக மக்கள் ஒழுங்காக கட்டிய வரிப்பணத்தில் இருந்து எவ்வளவு செலவு செய்யபட்டது?

14. இந்தப் பேரழிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்த அரசு தண்டிக்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: