தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாத 13 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடை கடுமையாக மாசு அடைந்து வருகிறது. இதனை தடுக்கவும் அந்த நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று இயற்கை வள முன்னேற்றம் பெரும்பள்ள ஒடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்காலத் தடைவிதித்தது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி, 32 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதன்படி 19 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். 13 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எச்.ஜி.ரமேஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பலமுறை நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியும் அறிக்கை தாக்கல் செய்யாத 13 மாவட்ட ஆட்சியர்கள் வரும் செப்டம்பர் 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: