அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உள்நாட்டு வேலைவாய்ப்பு பிரிவு பின்வரும் காலிப்பணியிடத்திற்கான சேவைக் கட்டணமில்லா நேர்முகத் தேர்வினைவரும் செப்.9அன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளது.
இந்த முகாம் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை-32 என்றமுகவரியில் நடைபெறும். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணிபுரிவதற்கு 50 டெக்னிசியன்கள் (ஐடிஐ, ஐடிசி, 1வருட ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் டிப்ளமோ தகுதியுடன் ஆட்டோ மொபைல் தொழிலில் இரண்டு வருட அனுபவம்; ரூ.12,000 முதல் 18,000 வரைமாதஊதியம் ) பணி அனுபவம் பெறாத 50 பயிற்சி டெக்னிசியன்கள் (பயிற்சிக் காலத்தில் ரூ.6000 மாத உதவித் தொகை) 5 ஏரியா மேனேஜர் பணியிடம் (இளங்கலை பட்டத்துடன் மூன்று வருட பணி அனுபவம் ரூ.12000 முதல் 15000 வரை மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை) 5 வரவேற்பு அலுவலக அதிகாரிகள்- (இளங்கலை பட்டத்துடன் மூன்று வருடப் பணி அனுபவம், மாதஊதியம் ரூ.12,000 முதல் 15000 வரை) மற்றும் 5 வருட பணி அனுபவத்துடன் இளங்கலை வணிக பட்டம், ஒருகணக்காளர் பணியிடத்திற்கு (ரூ.15000 முதல் 20000 வரை மாத ஊதியம்) வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் டெக்னிசியன்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு ஊதியம் மற்றும் பயிற்சி டெக்னிசியன்களுக்கு இலவச இருப்பிடம், பயணப்படி, பயணச் செலவினம் மற்றும் இலவச கைப்பேசி இணைப்பு ஆகியவை வழங்கப்படும். மேற்காணும் காலியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும் படியும் மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலக www.omcmanpower.com என்ற வலைதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளுமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது..

Leave A Reply

%d bloggers like this: