சேலம்,

சேலம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 8 மணி நேரத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் வியாழனன்று இரவு 10 மணி முதல் வெள்ளியன்று காலை 6 மணி வரையிலான 8 மணி நேரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு குறித்து மருத்துவமனையின் டீன் கனகராஜ், 2 குழந்தைகள், காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள். மற்ற இரண்டு பேர் இதயம், மூளை சம்பந்தப்பட்ட வேறு நோயால் இறந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்துத்தான் இருக்கிறது. அதற்கு அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எங்களுடைய தாலுக்கா மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கிறோம். இருந்தாலும் பயந்துகொண்டு மக்கள் இங்கு வருகிறார்கள். சென்னையில் இருந்து மூன்று, நான்கு மருத்துவர்கள் இங்கு வந்து எங்களுக்கு உதவி செய்கிறார்கள். இருந்தபோதும் ஒரு நாளைக்கு 400, 500க்கும் மேற்பட்ட மக்கள் வருவதால் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. இருந்தாலும் சிறப்பாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Leave A Reply