சாந்தமே உருவானவர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்களே ஆத்திரப்படும்படி முஸ்லீம்கள் நடந்துகொண்டதால்தான் மியான்மரில், புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் திருப்பி அடிக்கின்றனர்” எனறு ஒரு மடச் சங்கி சொல்கிறது.

நடக்கிற காட்டுமிராண்டித்தனத்தை, கொடூரங்களைப் பார்த்து உலகமே அதிர்ந்து, கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வேளையில், கொஞ்சம் கூட இரக்கமில்லாமல், மனிதாபிமானமில்லாமல் மூர்க்க மூடர்கள் இப்படி வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள்.

மியான்மரில் நடப்பது என்ன, அதன் பின்னணி என்ன என்றெல்லாம் கொ;”
ம் கூட அறியாமல் , தங்கள் வெறுப்பு அரசியலை மேலும் இந்தியாவில் விதைப்பதற்கு இதை ஒரு தருணமாக பார்க்கிறார்கள்.

மதங்கள் எல்லாம் அன்பையே போதித்தாலும், இரண்டு உலகப்போரில் பலியான மனித உயிர்களைக் காட்டிலும் இதுவரை இந்த பூமியில் மதத்தின் பேரால் நடந்த யுத்தங்களாலும், கலவரங்களாலும் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமானது. இதில் இந்த மதம், அந்த மதம் என்ற பேதமில்லை. எங்கே ஒரு மதம் பெரும்பான்மையானதாய், ஆதிக்க சக்தியாய் இருக்கிறதோ அங்கு அது கோரப்பற்களோடு கொடூரமாகி விடுகிறது.

மடச் சங்கிகளே! இந்தியாவில் நாலந்தாவின் நூல்கள் எரிய எரிய இந்த ‘சாந்தமான’ புத்த மதத்தினரை கொன்றது எது? இரத்தம் சொட்ட சொட்ட சமணரை இந்த மண்ணிலிருந்து அழித்தது எது?

மடச் சங்கிகளிடம் அன்பும் கிடையாது; அறிவும் கிடையாது.

Mathava Raj

Leave A Reply