ஒரு ஆயுள் போதாது இந்தத் துக்கத்தை செரிக்க.

இன்று எங்கள் அனிதா செத்துவிட்டாள். ஏனென்றால், அவள் கழிப்பறைகூட இல்லாத வீட்டில் பிறந்திருந்தாள்.

அனிதா செத்துவிட்டாள்; ஏனென்றால், ஒழுகலை காக்கும் ஓடு தவிர
அவளிடம் வேறு சொத்து இல்லை.

அனிதா செத்துவிட்டாள்; ஏனென்றால், அவள் பிறந்த யோனி சூத்திரச்சியுடையது என்று பிறரால் சொல்லப்பட்டது.

அனிதா செத்துவிட்டாள்; ஏனென்றால் அவள் மருத்துவம் படிக்க கனவுகண்டாள்.

அனிதா செத்துவிட்டாள்; ஏனென்றால், தகுதிக்கு அடிப்படை உழைப்பும் வெளிப்பாடும் என அவள் நம்பிக்கொண்டிருந்தாள்.

அனிதா செத்துவிட்டாள்; ஏனென்றால், அவள் எங்களோடு சேர்ந்து இல்லாதவர்களுக்கான கல்வியைக் கற்றுத்தேர்ந்தாள்.

அனிதா செத்துவிட்டாள்; ஆனால், அவளாக சாகவில்லை. அவள் படுகொலை செய்யப்பட்டாள்.

இனி எங்கள் வீடு தோறும் அனிதா பிறப்பாள்; ஆனால், அவளை சாகவிடமாட்டோம்.

Vivek Saamurai

Leave A Reply

%d bloggers like this: