அடை காத்த
கனவு
பதினேழாண்டு
தவம்
பாடாய்ப்பட்ட
தவிப்பு….

தலைநகர் சென்று
நீதி வென்று
நீட்டை வெல்லும்
துடிப்பு….

அத்தனையும்
அரியலூர்
அனிதாவுக்கு
கால் தூசு….

ஆனால் எமக்கு…
அடுத்திருக்கும்
சாலை செல்லவும்
கால்கள் இல்லை

குரல் எழுப்பவும்
நாவுகள் இல்லை
துடித்தெழவும்
தோள்கள் இல்லை

கடவாய் வழியே
குருதி ஒழுகவே
சிரிக்கிறான் மனு

ஒரு கல்லெறியவும்
கைகள் இல்லை….
த்தூ…த்தூ……
இது என்னடா
பிழைப்பு….த்தூ!

-சூர்யா, கோவை

Leave A Reply

%d bloggers like this: