திருவனந்தபுரம்,

நீட்தேர்வினால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன் கூறியதாவது.
நீட் தேர்வுக்கு எதிராக போராட வேண்டியவர்கள் பேரம் நடத்திக் கொண்டிருந்தார்கள் . இதைவிட வேறு அவலம் வேண்டுமா? அனிதா என்னுடைய மகள், என்னுடைய மகளுக்காக நான் குரல் கொடுப்பேன். மாணவி அனிதா தற்கொலைக்கு நியாயம் கேட்க சாதி, கட்சி, மதம், மாநிலம் கடந்து போராட வேண்டும். சிறந்த மருத்துவரை தமிழகம் இழந்து விட்டது. மாணவர்கள் தற்கொலையில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: