எரியூட்டுவோம்…!
===============
அரியலூர் அனிதா
இறந்துவிட்டார்
கம்புகளை கற்களை
எடுத்து வாருங்கள்….
பாடை கட்டனும்
பந்தல் போடனும்
சிதை அடுக்கனும்…

அரிவாளை சுத்தியலை
கற்களை கோடாரிகளை
எடுத்து வாருங்கள்
பாடை கட்டனும்
பந்தல் போடனும்
சிதை அடுக்கனும்
தீயை மூட்டனும்….

அனிதாவுக்கு மட்டுமா
அநீதி நீட்டுக்கும்
அதிகார மநுவுக்கும்
பாடை கட்டனும்
சிதை அடுக்கனும்
எரியூட்டனும்…!!!

-சூர்யா,கோவை.

Leave A Reply

%d bloggers like this: