இந்தியாவில் ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டிற்கு இதுவரை 6 பேர் பலி
இந்தியாவில் ப்ளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு இதுவரை 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற விபரம் வெளியாகியிருக்கிறது.
உலகம் முழுவதும் சிறுவர்களுக்கு மரணத்தை விளைவிக்கும் விளையாட்டாக ப்ளூ வேல் விளையாட்டு மாறியிருக்கிறது. அதில் இந்தியாவும் தப்பவில்லை, இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முதலில் உயிரிழந்தான். தொடர்ந்து கடந்த மாதம் மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் 5 ஆவது, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூரில் கடந்த 12 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டின் படி பிளாஸ்டிக் பையால் முகம் கட்டிய நிலையில் கழிவறையில் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாதம் 16 ஆம் தேதி கேரளாவில் 22 வயது மாணவர் இதே விளையாட்டின் படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது. உத்தரப் பிர‌தேசத்தில் 6 ஆம் வகுப்பு மாணவர் கடந்த 27 ஆம் இந்த விளையாட்டின் ஒரு பகுதியா தற்கொலை செய்து கொண்டான். இந்நிலையிலேயே நேற்று நேற்று மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் இதே விளையாட்டிற்கு பலியாகியுள்ளார். இப்படி இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், பலியாக இருந்த பல மாணவர்கள் கடைசிநேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 8 ஆம் வகுப்பு மாணவன் ப்ளூவேல் விளையாட்டில் கடைசி கட்ட சவாலை சந்திக்கும் வகையில் தற்கொலைக்கு முயன்ற போது சக மாணவர்கள் காப்பாற்றினர் . மகாராஷ்டிராவில் ப்ளூ வேல் விளையாட்டின் கடைசி நிலையை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 14 வயது சிறுவனை புனே காவல்துறையினர் காப்பாற்றினர். இன்று வடகிழக்கு மாநிலமான அசாமில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது காப்பாற்றப்பட்டு கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: