எவ்வளவு கேவலமான கேடுகெட்ட சமூகத்தில் வாழ்கிறோம் நாம் !
பாளையங்கோட்டையில் 12வயது ஏழாம் வகுப்பு மாணவி பள்ளி சீருடையில் மாதவிடாய் இரத்தம் கறை படிந்து அவர் இருக்கையிலும் கறை படிந்ததால் ஆசிரியர் அவரை திட்டியுள்ளார் இதனால் மனமுடைந்த மாணவி வீட்டுக்கு வந்து கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முதலில் இந்த சமூகத்தில் மாதவிடாய் குறித்து இன்னும் ஒரு வெங்காய விழிப்புணர்வும் இல்லை என்பது தான் வேதனை. டீவிக்களில் விற்பனை மோகத்துக்காக சானிட்டரி நாப்கின்கள் விளம்பரத்தை காட்டினாலும் எத்தனை பேர் அதன் பின் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. பத்துபேர் நின்று கொண்டிருக்கும் மருந்துக்கடையில் சத்தமாக சொல்லி சானிட்டரி நாப்கின் கேட்க யாருக்கும் இங்கு தைரியம் இல்லை.
அதை கருப்பு கலர் பிளாஸ்டிக் பையில் ஏதோ போதைப்பொருள் கடத்துவது போல மடித்து தராமல் வெளிப்படையாக கொடுக்கும் மனோபாவமும் இங்கு வளரவில்லை. இது சமூகத்தின் புரிதல் , ஆனால் பாளையங்கோட்டை பள்ளி மாணவி விவகாரத்தில் ஆசிரியரின் அலட்சிய சுடுசொற்கள் ஒரு உயிரை குடித்திருக்கிறது. மாதவிடாய் என்பது நம் உடலில் வெளியேறும் வியர்வை,சிறுநீர் போல ஒரு கழிவுப் பொருள் தான் என்பதை இந்த மரமண்டைகள் உணர்வது எப்போது ? 80 களில் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் சரியாக அவர்களது 15 வது வயதில் பருவமடைந்திருக்கிறார்கள்.
ஆனால் 90களுக்குப் பிறகு நம் உணவுப்பழக்கம் குழந்தைகள் 8 வயதிலேயே பருவமடைய ஆர்ம்பித்துள்ளார்கள். 8 முதல் 12 வயதுக்குள் என்ன புரிந்துவிடப் போகிறது மாதவிடாய் குறித்து ?? பல குழந்தைகளுக்கு அது எப்போது வரும் என்ற அறிகுறிகள் கூட தெரிவது இல்லை ! கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிகளே விஷம் போல் வார்த்தைகள் கக்கினால் பிஞ்சுகள் என்ன செய்யும் ? எத்தனை காலம் ஆனாலும் இங்க ஒரு புரிதலும் வரப்போறது இல்ல ,ஒண்ணு புரிஞ்சு நடந்துக்கோங்க இல்ல வெள்ளக்காரன் மாதிரி மாதவிடாய் விடுப்பு சட்டமாக்கிடுங்க உங்க சுடுசொல்லில் இருந்து உயிர்களாவது காப்பாற்றப்படும்…

ஆணுறை இலவசமாக குடுக்குறத விட்டுட்டு நாப்கின்களை இலவசமாக கொடுங்கடா !! நாடு உறுப்புடும் இதுல வெட்கமே இல்லாம நாப்கின்களுக்கு அதிக ஜி.எஸ்.டி வேற ?? பெண்களின் உதிரத்தில் காசு உறிஞ்சும் எச்சக்கூட்டம்….

#Rohini_Rj
Chinniah Kasi முகநூல் பதிவிலிருந்து

 

Leave a Reply

You must be logged in to post a comment.