• கருப்பு எல்லாம் வெள்ளையானது..!

  “99% செல்லா நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டன, இன்னும்
  கொஞ்சம் பணத்தை எண்ண வேண்டியிருக்கிறது: ரிசர்வ் வங்கி அறிக்கை”
  -இது டைம்ஸ் ஆப் இண்டியா தந்துள்ள தலைப்பு செய்தி.

  இதன் பொருள், கருப்பு பணம் எதுவும் வெளிவரவில்லை என்பது மட்டுமல்ல, அது அப்படியேவெள்ளையாகி விட்டது என்பதாகும். ]

  இது இந்த நூற்றாண்டின் மாபெரும் மோசடி. “50 நாட்கள் அவகாசம் கொடுங்கள் கருப்பு பணத்தை வெளிப்படுத்தி காட்டுகிறேன், இல்லையெனில் என்னை உயிரோடு கொளுத்துங்கள்” என்று முழக்கமிட்டார் பிரதமர் மோடி.

  50 நாட்கள் அல்ல 300 நாட்களுக்கு மேலாகி விட்டது. நிலைமை இதுதான். அவர் சாக வேண்டாம், நல்லபடியாக வாழட்டும். 


  ஆனால் பொருளாதாரத்தை சாகடித்ததற்காக, 100 க்கு மேற்பட்டவர்களை
  சாகடித்ததற்காக அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யட்டும். மானமுள்
  ளவர் செய்யும் செயல் அதுவே.

  -Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: