மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் ஒரே நாளில் 30 செ.மீ. அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக மும்பை நகரின் பெண்டி பசார் பகுதியில் உள்ள மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதுகுறித்து மாநகராட்சி பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கட்டிட இடிபாடுகளில் 30-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்படுள்ளது.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply