புதுடெல்லி,
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல், பெண்களை கடத்தல், பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ-கள் மற்றும் எம்பிக்களே முதலிடத்தை பிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ( ஏடிஆர் ) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.
அதன்படி , பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் தற்போதுள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்களில் 51 பேர் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் மீது வழக்குகள் இன்றும் உள்ளது. இதில் 3 எம்பிகள் மற்றும் 48 எம்எல்ஏக்கள் அடங்குவர். இதில் பாஜக வே முதலிடத்தில் இருக்கிறது. கட்சி வாரியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

பாரதீய ஜனதாவை சேர்ந்த 14 உறுப்பினர்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது. அடுத்தபடியாக சிவசேனாவும் (7 உறுப்பினர்கள்), திரிணாமுல் காங்கிரசும் (6 உறுப்பினர்கள்) உள்ளது. மாநில வாரியாக மகாராஷ்டிரா 12 உறுப்பினர்களுடன் முதலிடத்தில் உள்ளது, அடுத்தபடியாக மேற்கு வங்காளம் 11 உறுப்பினர்களையும், ஒடிசா 6 உறுப்பினர்களையும் கொண்டு உள்ளது என தெரியவந்து உள்ளது.  இவர்கள் மீது பெண்களை தாக்குதல், கடத்துதல், கடத்தி திருமணம் செய்ய வலியுறுத்துதல், பாலியல் பலாத்காரம், பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய உறவினர்களை துன்புறுத்துதல், பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை வாங்குதல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளது என்பது உறுதி படுத்தப்பட்டிருக்கிறது.

4,896 பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் 4,852 உறுப்பினர்களின் தேர்தல் ஆணைய உறுதிமொழி பத்திரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த எம்.பி.க்களில் 776 பேரில் 774 பேரின் உறுதிமொழி பத்திரம் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,120 ஆகும். இவர்களில் 4,078 எம்.எல்.ஏ.க்களின் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள உறுதிமொழி பத்திரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 1,581 எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது. இது மொத்த எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் 33 சதவிகிதம் ஆகும். 51 உறுப்பினர்கள் தங்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது என உறுதி மொழி பத்திரத்திலேயே தெரிவித்திருக்கின்றனர். ஆக எப்போதும், சமூக நிதி மட்டுமல்ல பெண்களுகுக்கு எதிரான வன்முறையிலும் கூட பாஜகதான் நம்பர் 1 என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

Leave A Reply