ஐதராபாத்: பி.எஸ்.எல்.வி.சி-39 ராக்கெட் திட்டமிடப்பட்ட நேரத்தில் நிலைநிறுத்தப்படவில்லை.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. இதன்படி 7 செயற்கை கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தில் முதலில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுள்காலம் நிறைவடைந்ததையடுத்து, தற்போது புதிய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வியாழனன்று மாலை சரியாக 6:59 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் திட்டமிடப்பட்ட 19 மணி நேரம் 45 வினாடிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படவில்லை. எனவே இந்த முயற்சி தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் உறுதிசெய்தார்.

Leave A Reply