நாளை முதல் அனைவரும் தங்களது ஒரிஜினல் ஓட்டுநர் உரிமங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒரிஜினல் உரிமம் தொலைந்து விட்டால் இணையம் மூலம் விண்ணப்பித்து பெற்றும் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஓட்டுநா் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்று பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.. eservices.tnPolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: