ஹூஸ்டன்,
அமெரிக்காவை உலுக்கி வரும் ஹார்வே சூறாவளிக்கு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ரூ 10 லட்சம் கோடி அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 25ம் தேதி அமெரிக்காவை தாக்கிய ஹார்வே சூறாவளி , நேற்று இரண்டாவது முறையாக டெக்சாஸ் எல்லையை ஒட்டிய லூசியானா கடலோர பகுதியை ஹார்வே கடந்து சென்றது.  இதனை தொடர்ந்து கடும் மழையால் வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி மீட்க்கப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் இதுவரை 38 பர் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெக்சாஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களுக்காக 30 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அப்போட் கூறினார். இந்த வெள்ளத்தில் சிக்கி இந்திய மாணவர் ஒருவரும் பலியாகியுள்ளார். இப்பகுதியில்  1 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: