வாழைப்பழ கதை

நீங்க என் கிட்டே என்ன சொன்னீங்க?

கருப்புப் பணத்தப் பிடிக்கப் போறேன்னு சொன்னேன்..

அதுக்கு நான் என்ன செஞ்சீங்க?

500, 1000 ரூபாயை செல்லாதுன்னு சொன்னேன்

அப்புறம் என்ன ஆச்சு?

எல்லோரும் அந்த நோட்டுகளையெல்லாம் பாங்கில போட்டாங்க

அது எதுக்குன்னு சொன்னீங்க?

கருப்புப் பணத்தை 500, 1000மா வச்சுருக்குவங்க எல்லாம் அதை பாங்கில போடும்போது புடிக்கிறதுக்கு, கள்ள நோட்டை ஒழிக்கறதுக்கு, எல்லை கடந்த தீவிர வாதத்த ஒழிக்கறதுக்குன்னு சொன்னேன்.

இப்போ என்ன நடந்துச்சு?

ஏறக்குறைய எல்லா பணமும் பாங்கிற்கு திரும்பி வந்துடுச்சு….

அப்ப கருப்புப் பணம் எங்க?

அதுதாண்ணே இது……

Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: