ஒவ்வொருநாளும் கை, கால் வலிப்பு தாக்கத்தால் அவதியுற்று, மருந்துக்கு பயனளிக்காத எதிர்ப்புத்திறன் கொண்ட, பிரியா என்ற 15 வயதாகும் இளம்பெண்ணுக்கு சவால் நிறைந்த அறுவைசிகிச்சையை சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் செய்து முடித்துள்ளனர்.
அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் அமைந்துள்ள கை, கால் வலிப்புக்கான  விரிவான சிகிச்சை மையத்தில் இந்த அறுவை சிகிச்சையை முதுநிலை நரம்பியல் சிகிச்சை நிபுணர் மற்றும் வலிப்பு நோய் வல்லுநரான டாக்டர். தினேஷ் நாயக் தலைமையிலான மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்தனர்.

பிரியாவுக்கு 10 வயதாகும் போது இந்த வலிப்புநோய் தாக்கங்கள் ஏற்படத்தொடங்கின. வலிப்புநோய்க்கு எதிரான மருந்துகளை அவர் எடுத்துக்கொண்டதால் 2 ஆண்டுகளுக்கு வலிப்பு நோய் தாக்கம் ஏற்படாமலேயே இருந்தது. எனவே இனியும் மருந்துகளை  தொடர வேண்டாமென்று மருத்துவர் கூறினார். ஆனால், மருந்து உட்கொள்வதை நிறுத்திய ஒரு மாதத்திற்குள்ளாகவே அவருக்கு மீண்டும் வலிப்புநோய் வரத்தொடங்கியது.

இதையடுத்து மலர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  பிரியாவின் மூளையின் மேற்பரப்புக்கு 3-லிருந்து 4 செ.மீ. கீழே  மத்தியில் உள்ள ஒரு குறுகலான பாதை வழியாக மிக ஆழமான பகுதியில் இருந்த அவ்விடத்தை அறுவை சிகிச்சைகுழுவினர் நிபுணத்துவத்திறனோடு அடைந்து பிரியாவின் வலிப்புநோய் தாக்கத்திற்கு காரணமாக உள்ள 2 செ.மீ. அளவுள்ள மூளை திசுவைவெட்டியெடுத்தனர். இதன் பிறகு வலிப்புநோய் தாக்கம் பிரியாவுக்கு ஏற்படுவதில்லை.

இரவில் மட்டும் வலிப்புநோய் தாக்கம் ஏற்பட்டதால் அடுத்தநாள் பகல் முழுவதும் மயக்கநிலையும், அசதியும் இருக்கும். நீச்சலும் சைக்கிள் சவாரியும் எனக்கு மிகவும் பிடித்தவை. ஆனால் இவை உட்பட எந்த உடற்பயிற்சிகளையும் என்னால் செய்ய முடியவில்லை. இந்த அறுவைசிகிச்சைக்கு பிறகு நாள்முழுவதும் ஆற்றல் உணர்வோடு துடிப்பாக நான் இருப்பதாவும் 6 மாதங்களில், நீச்சலையும், சைக்கிள் சவாரியை மேற்கொள்ளப்போவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பிரியா.

Leave A Reply

%d bloggers like this: