வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வி புயலில் சிக்கிய இந்திய மாணவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை ஹார்வி புயல் கடுமையாக தாக்கியது. இதில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும் மாணவர்கள் ஷாலினி, நிக்கில் பாட்டியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்களன்று தெரிவித்திருந்தார்.

ஜெய்பூரை சேர்ந்த மாணவர் நிக்கில் பாட்டியா மற்றும் தில்லியை சேர்ந்த ஷாலினி இருவரும் டெக்சாஸ் மாகாணத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் பிரயான் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, ஹார்வி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவரும் குளத்தில் மூழ்கினர். இதையடுத்து காவலர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நிக்கில் பாட்டியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷாலினி-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply