திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பாலியல் வல்லுறவு செய்துபடுகொலை செய்யப்பட்ட பெண்களின் குடும்பங்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டியும், உரிய நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும் சிறுபான்மை நலக்குழு, மாதர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் இரண்டு வீடுகளில் தனியாக இருந்த மாமியார் அஸ்மத்பீவி. மருமகள் தில்ஷாத் இருவரும்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அதே பகுதியில் தனியாகஇருந்த ஷாகிதா (55) அவரது 8 வயது பேத்தி ரிஷ்வானா ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இதனையடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிதா உயிரிழந்தார். உயிரிழந்தவர்க ளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் சிறுபான்மை மக்கள் நலக்குழு, மாதர் சங்கம் சார்பில்  செங்கம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் கே. அப்துல் மஜித் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மூசா தனது கண்டன உரையில், “இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் மீது நடத்தப் பட்டுள்ள கொடூரகொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் தமிழகத்தில் நடந்த இந்த கொடிய சம்பவங்க ளுக்கு தமிழக அரசு எந்தநிவாரணமும் அளிக்காமல் இருப்பது வேதனைக்குரியது என்று கூறினார்.

சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன், திமுக சட்டமன்ற உறுப்பினர் கிரி, சிபிஎம் மாவட்டச்செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் குமரேசன், தாலுகா செயலாளர் லட்சுமணன், தமுமுக மாவட்ட பொருளாளர் முகமது ரியாஸ், வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் பிரகலநாதன், துணைத் தலைவர் நடராஜன்,வி.ச. ஒன்றியச் செயலாளர் காமராஜ், மாணவர் மாவட்டச் செயலாளர் அன்பரசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் லூர்துமேரி, சிறுபான்மை நலக்குழு மாவட்ட துணைச் செயலாளர் சான்முகமது, மாவட்டத் தலைவர் நவாப் ஜான் ஆகியோர் பேசினர்.

Leave A Reply