ஈரோடு, ஆக.30-
கொடுமுடி, எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.35 லட்சத்துக்கு தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் போனது. ஈரோடு மாவட்டம், சாலைப்புதூரில், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் ஒன்றரை டன் தேங்காய் வரத்தான நிலையில், ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.25.65 முதல் அதிகபட்சம் ரூ.32.25 வரை ஏலம் போனது. இதேபோல், தேங்காய் பருப்பு 13.5 டன் வரத்தானது. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.100.75 முதல் அதிகபட்சம் ரூ.104.05, இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ.77.90 முதல் அதிகபட்சம் ரூ.101 வரை ஏலம் போனது. கடந்த வார ஏலத்தை விட தேங்காய் கிலோ ஒரு ரூபாயும், தேங்காய் பருப்பு ரூ.9 முதல் 13 ரூபாய் வரை உயர்ந்து விலை போனதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக ரூ.14 லட்சத்திற்கு தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம்போனது.

இதேபோன்று, எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு 22 ஆயிரத்து 142 கிலோ வரத்தானது. இதில் முதல் தரம் அதிகபட்ச விலை ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 640, குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்து 285க்கு ஏலம் போனது. இரண்டாம் தரத்தில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரத்து 55, குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 620க்கு விற்றது. மொத்தம் ரூ.20 லட்சத்து 90 ஆயிரத்திற்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட முதல் தர குவிண்டாலுக்கு ரூ.415 வரை விலை கூடியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: