ஜெய்பூர்,

ராஜஸ்தானில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் இடையே நடந்த மோதலால் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணை நடந்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது இரு மருத்துவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதத்தால் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply