மும்பை,

மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகினர். மேலும் நீரில் அடித்து செல்லப்பட்ட 4 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மும்பையில் திங்களன்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகள் முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விக்ரோலி வர்ஷா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 வயது சிறுவன் உயிரிழந்தார். இதேபோல் சூர்யா நகர் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் தாதரில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தாதர், கண்டிவிலி உள்ளிட்ட பகுதிகள் நீரில் அடித்து செல்லப்பட்ட 4 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை, தென் குஜராத், கோன்கான், கோவா மற்றும் மேற்கு விதர்பா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: