லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால், 2 வாரங்களுக்கு முன்னர் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் , மீண்டும் அதே மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மூளைக்காய்ச்சல், ஒவ்வாமை போன்ற காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்ததாகவும், கனமழை பெய்து மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: