பாஜக முன்னிறுத்தி வரும் கொள்கைகளுக்கு எதிரான சமூக நீதிக்கருத்துக்களை தந்தை பெரியார் தமிழக மக்கள் மத்தியில் பரப்பியுள்ளார். அந்த வழியில் நடப்பதாக கூறும் தமிழக ஆட்சியாளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

பெரியாரைப் போல் கேரளத்தில் ஸ்ரீநாராயணகுரு சமூக நீதிக்காக குரல் கொடுத்தார். அவரிடம் இருந்த சீடர்களில் சகோதரன் ஐயப்பன் என்பவர் புலையன் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருமுறை அவரை சிலர் சாதியை சொல்லி இழிவுபடுத்தினர். அப்போது சகோதரன் ஐய்யப்பன், சாதியும் மதமும் கடவுளும் நல்ல மனிதருக்கு வேண்டாம் என்று கூறினார்.

அதை குருவிடம் புகாராக எடுத்துச்சென்ற போது சகோதரன் ஐயப்பனின் கூற்றை ஆதரித்தார் குரு. ஸ்ரீநாராயண குருவை பின்பற்றி சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேயத்தை உயர்த்திப் பிடிக்கிறது. கேரளம் ஆனால் இதை மத துவேசத்தால் பாஜகவினர் சீரழிக்க நினைக்கிறார்கள். கேரளத்தில் அதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

Leave A Reply

%d bloggers like this: