ஹைதராபாத்,
திருப்பதி அருகே பள்ளி மாணவர்கள் சாலையைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி அருகே ஊர்வக்கல் நகரில் பள்ளி மாணவர்கள் சாலையைக் கடக்க முயன்றனர். எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த லாரி மாணவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: