தில்லி,

அரசின் நலத்திட்ட சலுகைகளை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், வங்கிக்கணக்கு, பான் கணக்கு உள்ளிட்டவுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி பான் கணக்கு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆதார் தொடர்பான வழக்குகள் நவம்பர் மாதம் முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: