மதுராந்தகத்தில் செயல்படும் மார்க்கெட்டிங் சொசைட்டியில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்கக்கோரி சிஐடியு சுமைப்பணி சங்கத்தின் சார்பில் சிலாவட்டம் கிராமத்தில் செயல்படும் கிடங்கு முன்பு சங்கத்தின் செயலாளர் பி.மாசிலாமணி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு அரசு அலுவலர்கள் யாரும் வராத நிலையில் கிடங்கு முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில்  சுமைப்பணியாளர்கள் ஈடுபட்டனர். சங்கத்தின் கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ், சிபிஎம் பகுதி செயலாளர் கே.வாசுதேவன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: