தமிழக அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக பணியாற்றி வந்த ஆர்.முத்துக்குமாரசாமி  செவ்வாயன்று (ஆக. 29) ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை லாயலோ கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்யையும் முடித்தவர் இவர்.

இவரின் தாத்தா எம்.கே.நம்பியார் இந்திய அரசமைப்பு சட்ட வடிவமைப்பில் மிக முக்கிய பங்கு வகித்தவர். மத்திய அரசின் தலைமை வழக்குரைஞராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட கே.கே. வேணுகோபால் இவரின் மாமனார்.

அரசமைப்பு, தொழிலாளர் நலன், நிர்வாகம் உள்ளிட்ட சட்டங்களில் சிறப்புப் பயிற்சி பெற்ற இவர் கடந்த 2004ஆம் ஆண்டு மூத்த வழக்குரைஞராக நிலை உயர்த்தப்பட்டார். இவர் 2012 இல் இந்திய சட்ட கல்விக் கழகத்தின் செயற்கு உறுப்பினராக செயல்பட்டுள்ளார். இப்போது திருச்சி தேசிய சட்டப்பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு பார் அசோசியேஷனின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். வியாழனன்று (ஆக. 31)  பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

Leave A Reply