2016ம் ஆண்டிற்கான  தமுஎகச திரைப்பட விருது வழங்கும் விழா வியாழனன்று (ஆக.31) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் விசாரணை, ஜோக்கர், அப்பா ஆகிய திரைப்படங்களுக்கும், சிறப்பு முயற்சி பிரிவில் உறியடி திரைப்படத்திற்கும் விருது வழங்கப்படுகிறது.

தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தமுஎகச பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், துணைத்தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன், பொருளாளர் சு.ராமச்சந்திரன், துணைப்பொதுச் செயலாளர் இரா.தெ.முத்து,  துணைத்தலைவர் மயிலை பாலு ஆகியோர் விருதுகளை வழங்குகின்றனர்.

விருதுகளை விசாரணை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனுஷ், ஜோக்கர் பட இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, அப்பா பட இயக்குநர் சமுத்திரக்கனி, உறியடி பட இயக்குநர் விஜயகுமார் ஆகியோர் விருதுகனை பெற்றுக் கொள்கின்றனர்.

தமுஎகச திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.கருணா, பத்திரிகையாளர் அ.குமரேசன், கவிஞர் சைதை ஜெ, திரைக்கலைஞர் ரோகிணி, நாடகவியலாளர் பிரளயன், இயக்குநர் அஜயன்பாலா, நாடகக்கலைஞர் பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
இவ்விழாவில் தமிழ்சினிமாவின் நூற்றாண்டை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள தமிழ்சினிமா 100- ஒலியும், ஒளியும் படம் திரையிடப்படுகிறது. மேலும், இயக்குர் ஆர்.ஆர்.சீனிவாசன் வடிவமைத்த தமிழ்சினிமா 100 திரைப்படக் கண்காட்சியும் வைக்கப்படுகிறது.

Leave A Reply