சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுண்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் . இவர் தனது சொந்த ஊரில் நடந்த மோதலில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ராமலிங்கம் கடந்த 4 நாட்களாக புதுக்கோட்டை- ஆலங்குடி செல்லும் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர் ராமலிங்கத்தை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave A Reply