ஈரோடு, ஆக.30-
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் குழு கூட்டம் ஈரோட்டில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாதம் ஒரு முறை நூல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை மின் கணக்கீடு எடுக்க வேண்டும். விசைத்தறிக்கு ரக ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். விசைத்தறிக்கு தனி வாரியம் மற்றும் அமைச்சகம் அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி இருந்து இணைய வழி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பில் விசைத்தறிக்கான கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சி.பழனிச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சி.ஜெகநாதன், வழக்கறிஞர் ஐ.சி.வாசுதாவன் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: