மனித நேய மக்கள் கட்சித்தலைவர்  ஜனநாயகத்தை காக்கவும்,  அரசியலமைப்பை காக்கவும் ஆளுநர் உடனடியாக தமிழக சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில்,  மியான்மர் நாட்டில் இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றன்ர்.  இராணுவம் இஸ்லாமியர்கள்ளின்   கிராமங்களை குறிவைத்து தாக்கி வருவதாகவும்  பொது மன்னிப்பு நிறுவனம் இஸ்லாமியர்கள்  மீதான    தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதாகவும் தெரிவித்தார்.     மியான்மர் அதிபராக அவுன் சாங் சுகி இருக்கும் நிலையில்  இந்த தாக்குதல் நடைபெறுவது வருத்தம் அளிப்பதாகவும் , சர்வதேச நாடுகள் இதை வன்மையாக  கண்டிக்க வேண்டும் எனவும் மியான்மருடன் தூரதர உறவை துண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஐ.நா மனித உரிமைக்குழுவிற்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்த அவர்  ஆளுநரை புதன்று காலை முக்கிய அரசியல் கட்சிகளுடன் சந்தித்ததாகவும் , தமிழக சட்டமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும்   என வலியுறுத்தியதகாவும், ஜனநாயகத்தை காக்கவும்,  அரசியலமைப்பை காக்கவும் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார் .

Leave A Reply

%d bloggers like this: