தில்லி ,

SUV மற்றும் சொகுசு கார்களுக்கான செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியின் படி அனைத்து கார்களுக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 1500 சிசி-க்கும் அதிகமான திறனுடைய இன்ஜின்களை கொண்ட கார்கள் மற்றும் 4 மீட்டருக்கு அதிக நீளமுடைய SUV கார்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியுடன் கூடுதலாக 15 சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்பட்டிருந்தது.  தற்போது சொகுசு மற்றும் SUV ரக கார்களுக்கான செஸ் வரியை மேலும் 10% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து SUV மற்றும் சொகுசு கார்களுக்கான செஸ் வரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்கிறது.

Leave A Reply

%d bloggers like this: