கோபி, ஆக. 30-
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள திங்களுர் பெரிய வீரசங்கிலிப் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தருவதாகக்கூறி ஐந்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே செயல்பட்டு வரும் கோழிப் பண்ணைகளால் பெரியவீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கோடாப்புலி கிரேநகர், கைகோளபாளையம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இக்கோழிப்பண்ணைகளால் வீடுகளுக்குள் ஈ, கொசு மற்றும் புழு, பூச்சிகள் அதிகளவில் புகுந்து அப்பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள்களை கூட சாப்பிட முடியாத அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், அங்கு வசிப்போர் கடுமையாக சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகி பல்வேறு தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தபோதும், இதுவரை எவ்வித நடவடிக்கை
யும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆவேசமடைந்த மேற்குறிப்பிட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை திடிரென காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.

இதனை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அப்பகுதிக்கு வந்து கொசு ஒழிப்பு மருத்துகளை தெளித்தும், ஈக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படாது வண்ணம் கோழிப்பண்
ணைகளை பராமரிக்க வேண்டும் என கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்திய அதிகாரிகள், இரண்டு நாட்களுக்குள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அதில் சுமூக தீர்வை ஏற்படுத்தித் தருவதாக
உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: