வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தின் ‘ஸ்கூல் ஆப் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்’ மற்றும் ‘ஸ்கூல் ஆப் பயோ சயின்ஸ் அண்டு டெக்னாலஜி’ ஆகியவை இணைந்து ஆய்வக மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களை நோயாளிகளுக்கு கொண்டு செல்லுதல் சம்பந்தமாக சர்வதேச அளவலான மூன்று நாள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டின் தொடக்க விழா வி.ஐ.டி.யில் வி.ஐ.டி.யின் செலக்ட் பள்ளி டீன் அமைப்பாளர் அருள்மொழிவர்மன் வரவேற் றார். மாநாட்டின் நோக்கம் குறித்து மாநாட்டு அமைப்பாளரும் சிங்கப்பூர் தேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழக பேராசிரியருமான பரசுராமன் விளக்கி பேசினார்.

மாநாட்டுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி மாநாடு குறித்த குறுந்தகட்டினை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் நாட்டின் ‘கிளினிக்கல் இமேஜிங்’ ஆராய்ச்சி மைய இயக்குனர் டேவிட் டபிள்யூ. டவுன் சென்ட் குத்து விளக்கேற்றினார்.

இம்மாநாட்டில் சிங்கப்பூர் நங்யாங் டெக்னாலஜிக்கல் பல்கலைக் கழக அறிவியல் இயக்குனர் பலாசஸ்குல்யாஸ், லண்டன் செலுலார் நியூரோபயாலஜி இம்பிரியல் கல்லூரி பேராசிரியர் ரிச்சர்ட் ரெனால்ட்ஸ், வி.ஐ.டி. துணை வேந்தர் ஆனந் ஏ.சாமுவேல் மற்றும் சிங்கப்பூர், ஜெர்மனி, ஹங்கேரி, பின்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த மருத்துவம், மின் மற்றும் மின்னணு தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியா ளர்கள், பேராசிரியர்கள் 300–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வி.ஐ.டி.ஸ்கூல் ஆப் பயோசயின்ஸ் அண்டு டெக்னாலஜி டீன் கோதண்டம் நன்றி கூறினார்.

இதையடுத்து டேவிட் டபிள்யூ.டவுன்சென்ட், பாலாஸ்குல்யாஸ், ரிச்சர்ட் ரெனால்ட்ஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உடலில் ஏற்படும் மூலக்கூறு பாதிப்புகளை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகள் சிங்கப்பூர் நாட்டின் கிளினிக்கல் இமேஜிங் ஆராய்ச்சி மையத்தில் நடந்து வருகிறது. இதற்காக 30–க்கும் மேற்பட்ட மூளை வங்கிகள் செயல்படுகின்றன. நோய் கண்டறிதலுக்கான எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உள்ளிட்ட சாதனங்கள் எடை அளவு அதிகமாக உள்ளது. தற்போது எடை அளவு குறைவான எளிதாக கையாளக்கூடிய வகையில் அந்த சாதனங்கள் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் சிகிச்சைக்கான செலவினம் குறையும்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: