பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் துணை நிறுவனம் எல்.ஐ.சி. ஹோம் பைனான்ஸ் லிமிடெட், வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இது 1989இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்.,நிறுவனத்தில் உதவியாளர் பிரிவில் 164 இடங்களும், உதவி மேலாளர் பிரிவில் 100 இடங்களும் என மொத்தம் 264 பணியிடங்கள். இவற்றில் உதவியாளர் பிரிவில் தமிழகத்துக்கு 22 இடங்கள் உள்ளன. உதவி மேலாளர் பணியிடங்கள் இந்திய அளவிலானது.

வயது : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2017 ஜூலை 1 அடிப்படையில் 21 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: உதவியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

உதவி மேலாளர் பதவிக்கு, எம்.பி.ஏ., படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இது தவிர 2 பதவிகளுக்கும் கூடுதலாக கம்ப்யூட்டர் அறிவு முக்கியம்.

தேர்ச்சி முறை: இரண்டு பதவிகளுக்கும் ஆன்லைன் முறையிலான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பக்கட்டணம் தலா 500 ரூபாய். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

பயிற்சிகாலம்: உதவியாளர் பணியில் சேர்பவர்கள் 6 மாதமும், உதவி மேலாளர் பதவியில் சேர்பவர்கள் 1 ஆண்டும் புரோபேஷன் அடிப்படையில் பணிபுரிய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 செப். 9

உதவியாளர் பதவிக்கு எழுத்துத்தேர்வு: 2017அக். 10

உதவி மேலாளர் பதவிக்கு எழுத்துத்தேர்வு; 2017 அக்., 12

விபரங்களுக்கு: www.lichousing.com/downloads/Detailed%20Advertisement_2017.pdf

Leave A Reply

%d bloggers like this: