எம்ஜிஆர் சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமனை நியமனம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையுலகில் முன்னணி கலைஞராக இருந்தவரும், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவருமான எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு சென்னையில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. குறிப்பாக எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, ராமவரம் தேட்டம், சத்தியா ஸ்டுடியோ, எம்ஜிஆர், ஜானகி காதுகேளாதோர் பள்ளி உள்ளடக்கிய பல்வேறு சொத்துகளை நிர்வகிக்க  உயில் எழுதினார். இந்த சொத்துக்களை உயர்நீதிமன்றம்தான் நிர்வகிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியின் மகன் மற்றும் ஜானகி எம்ஜிஆரின் உறவினர்களும் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் சொத்துக்களை நிர்வகிக்க (ஓய்வுபெற்ற) நீதிபதி அரிபரந்தாமனை நியமனம் செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து லதா ராஜேந்திரன், கீதா மது மோகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் ராஜிவ் சக்தேர், அப்துல் குத்தூஸ் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து அரிபரந்தாமன் நியமனம் செல்லும் என்று உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: