2015-ஆம் ஆண்டு  ஊதியமாற்று ஒப்பந்தத்தை வலியுறுத்தி நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தின் போது நிர்வாகத்தால் பொய் வழக்கு போட்டு 11 தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டனர். அந்த  தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப் பட்டு வருகிறார்கள்.  அவர்களுக்கு குடும்ப நிவாரண நிதியாக சிஐடியு மற்றும் ஆதரவு சங்கங்களின் சார்பாக தொழிலாளர்களிடம் வசூல் செய்து  11 பேருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

நெய்வேலி மெயின் பஜாரில் நடைபெற்ற கூட்டத்தில் நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர். அ.வேல்முருகன் தலைமை தாங்கினார்.  மாவட்ட பொருளாளர் ஜி. குப்புசாமி, எச்.எம்.எஸ் சங்க பொதுச் செயலாளர் பாஸ்கர், டிடீயுசி சங்க தலைவர் வேலு, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவர் மாத்தியாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு சங்க பொதுச்செயலாளர் டி.ஜெயராமன், துணைத் தலைவர் ச.திருஅரசு  உள்ளிட்டோர் பேசினர். பொருலாளர் ம. சீனுவாசன்   நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் நிவாரண நிதியை வழங்கினர்.

அப்போது பேசிய அ.சவுந்திரராசன்,“ ஊதிய மாற்று ஒப்பந்தம், போனஸ் இன்சென்டிவ் ஒப்பந்தங்களை காலதாமதப்படுத்தாமல் உடனே பேசி முடிக்கவேண்டும்” என்றார்.
சுரங்கங்களில் சட்டத்திற்கு புறம்பாக மேல்மண் நீக்கும் பணிகள் தனியாருக்கு வழங்குவதை நிறுத்தவேண்டும் என்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினர்.

நிர்வாகத்தின் அவுட்சோர்சிங் முறையால் ஊழல் மலிந்துள்ள நிலையில் சிஐடியு சங்கம் நேர்மையாக செயல்படுவதால் பொறுப்பாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்து விடுகிறது என்றும் சவுந்தரராசன் குற்றம் சாட்டினார்.

சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “ போராட்டம் நடத்தியபோது 11 தொழிலாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளததால் 10,000 நிரந்தர தொழிலாளர்கள், 14,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மிரட்டலாம் என்று நிர்வாகம் நினைப்பது நடக்காது. தொழிலாளர்களை பாதுகாப்பது தொழிற் சங்கத்தின் கடமை. அந்த கடமையை சிஐடியு  நிறைவேற்றயுள்ளது. தேவைப்பட்டால்  எதிர்காலத்திலும் நிதி வசூல் செய்து பாதிக்கப் பட்ட தொழிலாளர்களை  பாதுகாக்கும்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: