உத்தரப் பிரதேசம்;                                                                                                                                                                        பிஆர்டி மருத்துவமனையில் உயிரிழந்த 61 குழந்தைகளில், மூளைக்காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் 11 உயிரிழந்துள்ளன. இவைதவிர பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகள் 25 குழந்தைகளும், பொது மருத்துவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த 25 குழந்தைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்
எனினும், மூளைக்காய்ச்சல்தான் ஒரு சவாலாக உள்ளதாக பிஆர்டி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக பருவமழைக் காலத்தில், கனமழை, வெள்ளம் மற்றும் நீர் தேங்குதல் காரணமாக மூளைக்காய்ச்சல் தாக்கம் அதிகம் இருக்கும் என்ற நிலையில், மாநில அரசானது, இந்நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.

குறிப்பாக, பிஆர்டி மருத்துவமனையின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் பி.கே. சிங்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இவர்தான் பிஆர்டி மருத்துவமனையின் மூளைக்காய்ச்சல் பிரிவு தலைமை மருத்துவராகவும் உள்ளார்.

“கடந்த ஜனவரியில் மூளைக்காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த இடைவிடாது பணிகள் மேற்கொள்ளப்பட்டன; ஆனால் பின்னர் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் உத்தரபிரதேச தேர்தலில் பிஸியாகி விட்டது; கொசு ஒழிப்பு பணிகள், தூர் வாரும் பணிகள், தடுப்பூசி மற்றும் நீரில் குளோரினை கலந்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படவில்லை;

இதனால் தற்போது பருவமழை துவங்கியதும், குழந்தைகள் மத்தியில் மூளைக்காய்ச்சல் நோய்ப் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கி விட்டது” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: