சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

இமாச்சலப் பிரதேசம் சாம்பா மாவட்டம் டல்ஹெளசி பகுதியில் இன்று காலை சுமார் 30 பயணிகளுடன்  சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave A Reply