கோவை, ஆக. 30 –

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் அதனை உட்கட்சி தகராறு தலையிட முடியாது என ஆளுநர் சொல்லியிருப்பது அவரின் பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல, ஆளுநர் மௌனத்தில் உள்நோக்கம் இருக்கிறதா என்பதை அவரிடம் கேட்க வேண்டும்  என திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவருமான துரைமுருகன் புதன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கூறுகையில், அதிமுகவில் உள்ள 19 எம்எல்ஏக்களும் தனி தனியாக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர். ஓபிஎஸ் தலைமையில் 9 எம்எல்ஏக்கள் வெளியேறிய போது  மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என்று இதே ஆளுநர்தான் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் இது உட்கட்சி தகராறு தலையிட முடியாது என சொல்லி இருப்பது என அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல. இந்த விவகாரத்தில் ஆளுநர் மெளனம் சாதிப்பதற்கு உள்நோக்கம்ம் எதுவும் இருக்கின்றதா என்பதை அவரிடம் கேட்க வேண்டும் என தெரிவித்த துரைமுருகன்  மத்திய அரசின் தலையீடு இல்லாமல் ஆளுநர் செயல்பட மாட்டார்  என குற்றம் சாட்டினார்.

Leave A Reply

%d bloggers like this: