கோவை: தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை என நடிகர் கமல் கோவையில் பேசியுள்ளார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன் கூறியதாவது: இது திருமண விழா அல்ல, ஆரம்ப விழா. . ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். இதனை இப்படியே விட்டு வைக்க கூடாது. தமிழக அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை. இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள். தேவைப்படும் போது கோட்டையை நோக்கி புறப்படுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: