பெங்களூரு,

பெங்களூரில் 3 ஆவது மாடியில் இருந்து குழந்தையை வீசி கொன்ற தாயை காவலர்கள் கைது செய்தனர்.

பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 9 வயது குழந்தையை இரண்டு முறை 3 ஆவது மாடியில் இருந்து வீசி கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு மிக சிரமப்பட்டு வந்தது. இதனால் மனம் வெறுத்து குழந்தையை கொன்றதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. காவலர்கள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply